விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் காலியாக உள்ள கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 11, 2014

விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் காலியாக உள்ள கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது்

விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் காலியாக உள்ள கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த தொகுப்பூதிய கணக்காளர் பணியிடத்திற்கு குறிப்பிட்ட கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம் ஆகும். அதன் அடிப்படையில் பி.காம் அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணிப்பொறியில் டாலி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், இப்பணி முற்றிலும் தாற்காலிகமானது என்பதால் மாதந்தோறும் ரூ.7500 மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும். எனவே இப்பணியிடத்திற்கு ஆர்வமுள்ளோர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம், விருதுநகர் மாவட்டம் என்கிற முகவரியில் இயங்கி வரும் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வருகிற 19-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்

No comments:

Post a Comment