முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுபயிற்சிக்கு அழைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 21, 2014

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுபயிற்சிக்கு அழைப்பு

சென்னை ஆசிரியர் தேர்வாணையம் 2015ம் ஆண்டு ஜனவரி 10ல் நடத்தும்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஐ.டி.ஐ. அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 18ம் தேதி முதல் நடக்கிறது.
பயிற்சி வகுப்புகள் வரும் எட்டாம் தேதி வரை (சனி, ஞாயிறு நீங்கலாக) சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது.
பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடக்கும்
. ஆகவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்த கொள்ள விரும்பினால் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment