அரசு பள்ளிகளில் சுற்றுச் சுவர் மற்றும் இரவு நேர காவலர் இல்லை. பாதுகாப்பு இல்லாததால் திருட்டு, சமூக விரோத செயல்கள் அங்கே நடக்கின்றன. இப்பிரச்னையில் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவைகளில் சுற்றுச்சுவர்
இல்லை. இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இரவு நேர காவலரும் கிடையாது. இப் பள்ளிகளில் வேலை நேரத்திலேயே பன்றி, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாதாரணமாக நடமாடுகின்றன.
அங்கு வளர்க்கப்படும் செடிகளை கால்நடைகள் மேய்ந்து விடுகின்றன. சில பள்ளிகளில் பெயருக்கு என முள் வேலி அமைத்துள்ளனர். பாதுகாப்பு என நினைத்து இதனை அமைப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், இப்பள்ளியை இருப்பிடமாகப் பயன்படுத்துகின்றன
சுற்றுச் சுவர் இல்லாத பள்ளிகளில் காவலராவது நியமிக்க வேண்டும். ஊருக்கு வெளியே உள்ள பெரும்பாலான பள்ளிகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது. மதுகுடிப்பது, சூதாட்டம் உள்ளிட்ட செயல்கள் அங்கே அரங்கேறுகின்றன. போலீஸ் மூலம் இதை தடுக்க வேண்டும். மாவட்டத்தின் பல பகுதி அரசு பள்ளிகளில் பாதுகாப்பற்ற நிலைதான் உள்ளது. சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. இங்கெங்லாம் சுற்றுச்சுவர் அமைத்து, இரவு காவலரை நியமிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment