பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை பதிய புது 'சாப்ட்வேர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 7, 2014

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை பதிய புது 'சாப்ட்வேர்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில், 'ஆப்லைனில்' பதிவு செய்யும் பணிக்காக பள்ளிகளுக்கு புதிய, 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது.


அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள இத்தேர்வுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதவுள்ளோர் பெயர், பள்ளி உள்ளிட்ட விவரங்கள் www.tndge.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலக தேர்வுப்பிரிவு, கம்ப்யூட்டர் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. அவர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்கிடையே பெயர்களை பதிவேற்றம் செய்வதற்கான சாப்ட்வேர் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவரின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவதற்கு 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து பணியை துவங்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவரங்களை சரிபார்த்தபின், தேர்வுத் துறை கூறும் நாட்களில் அவற்றை ஆன் - லைனில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment