தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: தொலைதூர கல்வி முறையில் மாணவர் சேர்க்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 17, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: தொலைதூர கல்வி முறையில் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2015ம் கல்வியாண்டுக்கான தொலைதூர கல்வி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இளநிலை பட்டப் படிப்பில் பி.ஏ தமிழ், பி.லிட், பி.ஏ .,உருது, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, பி.ஏ ஆகிய படிப்புகளும், முதுகலையில்
எம்.ஏ.,தமிழ், எம்.ஏ, எம்.எஸ்சி ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளும், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

             இளங்கலை படிப்பிற்கு பிளஸ் 2வில் சேர்க்கையும், முதுகலை படிப்புக்கு ஏதாவதொரு பிரிவில் இளங்கலையும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100ம், தபாலில் பெற கூடுதலாக ரூ.50ம் செலுத்த வேண்டும். இதனை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும். எம்.பி.ஏ படிப்புக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக http://www.tnou.ac.in  இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment