யூ.பி.எஸ்.சி.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் மக்களவையில் அறிவித்தார். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 6, 2014

யூ.பி.எஸ்.சி.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் மக்களவையில் அறிவித்தார்.

யூ.பி.எஸ்.சி. (யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் மக்களவையில் அறிவித்தார். இதுகுறித்து ஆரணி தொகுதியின் 
அதிமுக உறுப்பினர் 
வி.ஏழுமலை எழுப்பிய துணைக் கேள்விக்கு ஜிதேந்தர் சிங் கூறும் போது, “சில நாட்களுக்கு முன்பு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியில் உண்மை இல்லை. இன்றைய நிலவரப்படி சிவில் சர்விஸ் எழுதும் பொதுப் பிரிவினர் 32 வயது வரை ஆறு முறை தேர்வு எழுதலாம். ஓ.பி.சி. பிரிவினர் 35 வயது வரை ஒன்பது முறையும், பழங்குடி மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட வகுப்பினர் 37 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்” என்றார்.

No comments:

Post a Comment