நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான இயற்கையான இரத்த தூய்மையாக்கிகள்!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 18, 2014

நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான இயற்கையான இரத்த தூய்மையாக்கிகள்!!!

இரத்தம் என்பது நமது உடலில் உள்ள முக்கியமான மூலப்பொருளாகும். ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜெனை உடலில் உள்ள உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது இரத்தம். 
உடலில் உள்ள ஆபத்தான நச்சுப் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டுமானால் அதற்கு உணவு தான் சிறந்த மருந்தாக விளங்கும். பழங்கள், காய்கறிகள், மூலிகை செடிகள், மசாலாப்
பொருட்கள், இரத்த சுத்தரிப்பான் பானங்கள் மற்றும் தேநீர் போன்றவைகளை பயன்படுத்தி இரத்தத்தை சுத்தப்படுத்தலாம்.
தூய்மை கேடு, உணவில் சேர்க்கப்படும் தீவன உபப் பொருட்கள், பிறர் பிடித்த சிகரெட்டை பிடிப்பது மற்றும் இதர நச்சுத்தன்மையில் இருந்து ஏற்படும் ஆபத்துகளில் இருந்து உங்களை பாதுகாக்க பழங்கள், காய்கறிகள், நட்ஸ், எண்ணெய்கள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை உண்ணுங்கள்.

ஆப்பிள் ஆப்பிள் பழங்களில் பெக்டின் அளவு அதிகமாக உள்ளது. பெக்டின் என்பது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் கனமான கனிமங்களுடன் தொடர்பில் உள்ள நார்ச்சத்தாகும். இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி குடலை சுத்தப்படுத்தும்.

பீட்ரூட் பீட்ரூட்டை பயன்படுத்தி சூப்கள் அல்லது குழம்புகளை தயார் செய்து உண்ணுங்கள். பீட்ரூட்டில் தனித்துவுமுள்ள இயற்கையான தாவர கூட்டுக்கள் அடங்கியுள்ளதால், இரத்தத்தை தூய்மையாக்கி ஈரலை சுத்தமாக்க சிறந்த உணவாக விளங்குகிறது.

முட்டைக்கோசு முட்டைக்கோசுவில் எண்ணிலடங்கா கேன்சர் எதிர்ப்பு சேர்க்கைகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேர்க்கைகளும் அடங்கியுள்ளது. உங்கள் எடலில் உள்ள ஈரல், அளவுக்கு அதிகமாக உள்ள ஹார்மோன்களை உடைத்தெறிய இது உதவி புரியும். உங்களின் செரிமான பாதையையும் இது சுத்தப்படுத்த உதவும். அதே போல் சிகரெட் பிடிப்பதால் உங்கள் உடலில் ஏறும் ஆபத்தான நச்சுப் பொருட்களை நீக்கவும் இது உதவும்.

பூண்டு உங்கள் உடலில், முக்கியமாக இரத்தம் மற்றும் குடலில் உள்ள தீமையான பாக்டீரியா, குடல் ஒட்டுண்ணி மற்றும் கிருமிகளை அளிக்க பூண்டை உண்ணுங்கள். மேலும் அதில் கான்சர் எதிர்ப்பி மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அவை உங்கள் உடலில் உள்ள தீமையான நச்சுப்பொருட்களை சுத்தப்படுத்த உதவும்.

மஞ்சள் மஞ்சள் என்பது இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருளாகும். அதிலுள்ள மருத்துவ குணங்கள் உங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவும் என்பது காலம் காலமாக அறியப்பட்டவை. இயற்கையாகவே நச்சை நீக்கும் கருவியாக அது செயல்படுவதால் உங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்த இது உதவுகிறது.

தேநீர் உடலை தூய்மைபடுத்தும் தேநீர் வடிவத்தில் பல மூலிகைகளை உட்கொள்ளலாம். இது உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும். இரத்தத்தை சுத்தப்படுத்த வீட்டிலேயே தயாரிக்கப்படும் சில தேநீர் வகைகள் உள்ளது - இஞ்சி தேநீர், புதினா தேநீர் மற்றும் சீமைக் காட்டுமுள்ளங்கி தேநீர். இரத்தத்தை சுத்தப்படுத்த எத்தனை முறை வேண்டுமானாலும் கிரீன் டீயை குடிக்கலாம்.

No comments:

Post a Comment