நாச்சியார் கோவிலில் இன்று பள்ளியை பூட்டி மாணவர்கள் மறியல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 9, 2014

நாச்சியார் கோவிலில் இன்று பள்ளியை பூட்டி மாணவர்கள் மறியல்

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் கழிவறை, குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. சத்துணவும் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இன்று காலை பள்ளி கதவை பூட்டி பள்ளி முன் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் வகுப்புகளையும் புறக்கணித்தனர்.
இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர் மற்றும் போலீசார் மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment