இல்லம் நோக்கும் பள்ளி திட்டம் இல்லம் நோக்கும் பள்ளி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 14, 2015

இல்லம் நோக்கும் பள்ளி திட்டம் இல்லம் நோக்கும் பள்ளி

இல்லம் நோக்கும் பள்ளி திட்டம்
                      இல்லம் நோக்கும் பள்ளி திட்டத்தின் மூலம் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் அய்யா திரு . தமிழரசு அவர்களின் சீறிய முயற்சியின் விளைவால் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் தேர்ச்சி சதவீத்தினை அதிகரிக்கவேண்டி மாணவ மாணவிகளின் வீட்டிற்கே முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள், ஆசிரியர் பெருமக்கள் , தலைமை  ஆசிரியர்கள் ஆய்வு அலுவலர்கள் ஆகியோர் சென்று மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக இன்று 13.10.2015  காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் வீட்டிற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் சென்று ஆய்வு செய்தனர். காவேரிப்பட்டணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான போத்தாபுரம், எர்ரள்ளி, பையுர்,தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் போன்ற இடங்களில் உள்ள மாணவ மாணவிகளின் வீடுகளுக்கு சென்று இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலர் திரு. தமிழரசு அய்யா அவர்கள், காவேரிப்பட்டணம் ஆண்கள் மே.நி.பள்ளி தலைமை ஆசிரியர் திரு வீரமணி, பள்ளி முதுகலை ஆசிரியர்கள் திருவாளர்கள் சங்கர், சத்தியமூர்த்தி, சீனிவாசன், பட்டதாரி ஆசிரியர்கள் திருவாளர்கள் விஜயகுமாரன், செந்தில், விஜயகுமார், அஸ்லம்பாஷா, உடற்கல்வி ஆசிரியர்  பவுன்ராஜ், ஆகியோரும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரும் அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment