ரயில் கட்டணம் 10 சதவீதம் உயருகிறது? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 12, 2016

ரயில் கட்டணம் 10 சதவீதம் உயருகிறது?

ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பயணக் கட்டணம் 10 சதவீதமும், சரக்கு கட்டணம் 5 சதவீதமும் உயத்தப்படலாம் என ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடும் நிதி நெருக்கடியில் ரயில்வே துறை சிக்கியுள்ள நிலையில், வரும் 25ல், தாக்கல் செய்ய உள்ள ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்கள் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் மற்றும் சரக்கு போக்கு வரத்து வருவாய் குறைந்துள்ள நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தினால், ரயில்வேக்கு, கூடுதலாக, 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதை சமாளிக்க, பயணிகள் கட்டணம் 10 சதவீதமும், சரக்கு கட்டணம் 5 சதவீதமும் உயர்த்தப்படலாம் என, தெரிகிறது. எனினும் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

No comments:

Post a Comment