பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை, 110 விதியின் கீழ் அறிவிப்பு? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 17, 2016

பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை, 110 விதியின் கீழ் அறிவிப்பு?

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், 10ம் தேதி முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சட்டசபையில் நேற்றுதாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள் ஏதும் இடம் பெறாததால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனால், அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள், மறியலில் ஈடுபட்டனர். சென்னை, எழிலகத்தில் மறியல் செய்த, 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்; தமிழகம்முழுவதும், 45 ஆயிரம் பேர் கைதாகினர்.

இதுகுறித்து, அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது:அரசு ஊழியர் சங்கத்துடன், 9ம்தேதி பேச்சு நடத்திய மூத்த அமைச்சர்கள் குழு, 11ம் தேதி முடிவு அறிக்கப்படும் என்றனர். ஒரு வாரம் ஆகியும் இன்னும் முடிவு அறிவிக்கவில்லை; இடைக்கால பட்ஜெட்டிலும் ஒன்றும் சொல்லவில்லை. எனவே, போராட்டத்தை தீவிரப்படுத்துகிறோம்.இதற்காக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட, ஆசிரியர்கள்அமைப்புகளும், அரசு ஊழியர்களுடன் இணைந்து உள்ளன. அரசு ஊழியர் - ஆசிரியர் போராட்டக் குழு துவக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

110 விதியின் கீழ் அறிவிப்பு?

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், 'மரபு கருதி புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை' என, தெரிவித்தார். கூட்டத்தொடர் இம்மாதம், 20ம் தேதி வரை, நான்கு நாட்கள் நடப்பதால், முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ், அறிவிப்பு வெளியிடுவார் என, அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment