15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு வருகிறது தடை மத்திய அரசு பரிசீலனை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 9, 2016

15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு வருகிறது தடை மத்திய அரசு பரிசீலனை!

காற்றில் மாசு அளவை குறைக்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட வாகனங்களை தடைசெய்ய, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான
வரைவு அறிக்கை, மத்திய அமைச்சரவையில், இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பெரும்பாலான நகரங்களில், வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று மாசு அதிகரித்து வருகிறது.
அதை குறைப்பதற்கான திட்டங்களை, மத்திய அரசு வகுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, டில்லியில் தற்போது, 2,000 சி.சி., திறனுக்கும் மேம்பட்ட டீசல் வாகனங்களை, பதிவு செய்ய மார்ச் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், டில்லி, நொய்டா உள்ளிட்ட தேசிய தலைநகர் மண்டலங்களில், சொகுசு டீசல் வாகனங்கள் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

இந்தியாவில், சொகுசு வாகன விற்பனையில், 20 சதவீதம் தலைநகர் பகுதியில் நடைபெறுவதால், பெரும் சரிவை

சந்தித்திருக்கும், 'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம் இதை விமர்சித்துள்ளது.

'லேண்ட்ரோவர் ஜாகுவார்' கார்நிறுவனமோ, 'டில்லி காற்றில் இருக்கும் மாசின் அளவைவிட, எங்கள் வாகனம் வெளியிடும் மாசு அளவு மிகக் குறைவு. டில்லியில் அமலில் இருக்கும் இந்த சட்டம் விந்தையாக உள்ளது' என, கேலி செய்துள்ளது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், வாகனப்புகை மாசை குறைக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சில நாட்களுக்கு முன், டில்லியில் வாகன கண்காட்சியை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 'பழைய வாகனங்களுக்கு தடை விதிப்பது தொடர்பான அறிக்கை தயாரித்து வருகிறோம். இம்மாத இறுதிக்குள், அதை, மத்திய அமைச்சரவையிடம் அளிக்க உள்ளோம். அதற்குள், அது தொடர்பான கருத்துக்கள் ஏதேனும் இருந்தால், ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கலாம்; அவையும், பரிசீலிக்கப்படும்' என, தெரிவித்தார்.

வரி சலுகை:

பழைய வாகன தடைச் சட்டம் அமலுக்கு வரும்போது, அந்த வாகன உரிமையாளர்கள், அங்கீகரிக்கப்பட்டபழைய பொருட்கள் வாங்கும், 'ஸ்கிராப்' கடைகளுக்கு சென் றால், அங்கு அதை பரிசோதித்து, ஒரு சான்றிதழ் தருவர். அதில், அந்த வாகனத்தின் மதிப்பு குறிப்பிடப்பட்டிருக் கும். புதிய வாகனங்களை வாங்கும்போது, அதற்கேற்ப, வாகன வரி சலுகை காட்டப்படும்.

51 லட்சம் வாகனங்கள் காலி:
தற்போது, 2.15 கோடி வாகனங்கள் உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய வாகனங்களை தடை செய்யும்போது, 41 லட்சம் இரு சக்கர வாகனங்கள், நான்கு லட்சம் கார்கள் உள்பட, 51 லட்சம் வாகனங்கள் காயலான் கடைக்குச் செல்லும் நிலை ஏற்படும்.

No comments:

Post a Comment