தொடக்க கல்வி பட்டயத் தேர்வர்கள் விடைத்தாள் நகல் பெற 16 முதல் விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, February 13, 2016

தொடக்க கல்வி பட்டயத் தேர்வர்கள் விடைத்தாள் நகல் பெற 16 முதல் விண்ணப்பிக்கலாம்

2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்விப் பட்டயத் தேர்வு எழுதிய பயிற்சி மாணவர்கள், தனித் தேர்வர்கள் விடைத்தாளின் மறுகூட்டல், நகல் கோரி செவ்வாய்கிழமை (பிப்ரவரி 16) முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின்னர், அதைத் தொடர்ந்து, விருப்பமுள்ள தேர்வர்கள், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யவும் www.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையும் மேற்குறிப்பிட்ட நாள்களில் தாங்கள் பயின்ற மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment