தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மாநாடு: கோவில்பட்டியில் இன்று தொடங்கியது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 5, 2016

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மாநாடு: கோவில்பட்டியில் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் 3 நாள் மாநில மாநாடு கோவில்பட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற் றாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து இந்த மாநாட்டில் முடிவு எடுக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.பாலசந்தர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் 6-வது மாநில மாநாடு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட் டியில் 5-ம் தேதி (இன்று) தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கல்வியில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, உயர் கல்வியில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பது உள் ளிட்ட அரசின் முடிவைக் கைவிட வலியுறுத்தியும், அரசுப் பள்ளி களைப் பாதுகாத்து பொதுக் கல்வியை பலப்படுத்துவது பற்றியும், உண்மையான சமச்சீர் கல்வியை வழங்க வலியுறுத்தியும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்படுகின்றன.

மேலும், 6-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது, புதிய பென்சன் திட்டத்தை கைவிடுவது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளும் மாநாட்டில் வலி யுறுத்தப்படும். இந்த கோரிக் கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசு ஊழியர் அமைப்புகளுடன் இணைந்து மிகத் தீவிரமான போராட்டங்களை நடத்தவும் மாநாட்டில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment