பொறியியல் கல்லூரி அனுமதி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 22, 2016

பொறியியல் கல்லூரி அனுமதி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் அனுமதி புதுப்பிப்பு, புதிய கல்லூரிகள், பாடங்கள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களைச்
சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) நீட்டித்துள்ளது. புதிய பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குதல், ஏற்கெனவே இயங்கி வரும் கல்லூரிகளுக்கு அனுமதி நீட்டிப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை ஏஐசிடிஇ மேற்கொண்டு வருகிறது. இப்போது, 2016-17 ஆம் கல்வியாண்டுக்கான அனுமதி வழங்கும் பணியை ஏஐசிடிஇ தொடங்கியுள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, இதற்கான கடைசிநாள் வரும் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகைகள்: இம்முறை பல்வேறு புதிய சலுகைகளையும் ஏஐசிடிஇ அறிவித்திருக்கிறது. அதன்படி, தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள், 50 சதவீத படிப்புகளுக்கு தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.பி.ஏ.) அங்கீகாரம் பெற்றிருக்கும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்குவது, பொறியியல் கல்லூரிகளில் 80 சதவீதம் முழு நேரப் பேராசிரியர்கள் இருந்தால் போதுமானது, புதிய கல்லூரி தொடங்க கிராமங்களில் 7.5 ஏக்கர் நிலமும், நகர்ப்புறங்களில் இரண்டு இடங்களில் 2.5 ஏக்கர் நிலமும், மெகா மெட்ரோ நகரமான சென்னையில் 1.5 ஏக்கர் நிலமும் போதுமானது என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment