ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 18, 2016

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

?தொடக்கக் கல்வி பட்டய தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள்களை மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற ஜி. அரியூர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2015ல் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதி முடிவுகள் வெளியிடப்பட்ட, பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள், விடைத்தாளின் மறு கூட்டல் மற்றும் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்.விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின், விருப்பம் உள்ள தேர்வர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய கட்டணத்துடன், குறிப்பிட்ட கட்டணத் தொகையை ஜி.அரியூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வரும் 20ம் தேதிக்குள் நேரடியாக செலுத்தி, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment