டீ கடையில் வெட்டியாக அமர்ந்துக் கொண்டு போராட்டம் பற்றி கொச்சையாக பேசும் அறிவாளிகளுக்கு சில கேள்விகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 1, 2016

டீ கடையில் வெட்டியாக அமர்ந்துக் கொண்டு போராட்டம் பற்றி கொச்சையாக பேசும் அறிவாளிகளுக்கு சில கேள்விகள்

இன்று 01.02.2016 முதல்  வகுப்புகளை புறக்கணித்து ஆசிரியர்கள் தங்களின் உரிமையை நிலை நாட்ட போராட்டம் .....

டீ கடையில் வெட்டியாக அமர்ந்துக் கொண்டு போராட்டம் பற்றி கொச்சையாக பேசும்
அறிவாளிகளுக்கு சில கேள்விகள்

1. ஒரே ஒரு முறை வெற்றி பெற்று சாதாரண கவுன்சிலராக வரும் ஒருவர் 5 ஆண்டுகளில் கோடிஸ்வரனாவது எப்படி ?

2. ஒரு முறை MLA அல்லது MP ஆனால் போதும் 7 தலைமுறைக்கும் சொத்து சேர்த்து விடுவார்கள்
அது மட்டும் அல்ல 5 ஆண்டுகள் சுருட்டியது போதாது என்று அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஊதியம் வேறு இது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?

30 வருடங்களுக்கு உழைத்தாலும் எங்களுக்கு ஓய்வு ஊதியம் இல்லை ஏன்?

3. இவர்களுக்கே வெட்கம் இல்லாமல் மீண்டும் மீண்டும் ஓட்டு போடுகிறாயே ஏன் ?

4. மற்ற துறைகளில் தனது கடமையை செய்யவே லஞ்சம் வாங்கும் போது நீ எந்த எதிர்ப்பும் சொல்லுவதில்லையே ஏன் ?

5.எந்த ஆசிரியராவது லஞ்சம் வாங்கியது உண்டா?

6.உடனே சிலர் டியூசன் எடுக்கின்றனர் என்பாய்
அட மடையனே அதற்காக அவர்கள் extra உழைக்கிறார்கள் என்பது உனக்கு புரியாதா?

7.சம்பள உயர்வு என்று செய்தி வந்தால் ஆசிரியர்கள் சம்பளத்தை பற்றி மட்டும் நீ வாய் கிழிய பேசுவது ஏன் ?

8.ஒரு மணி நேரம் நின்று ஆவி போக கத்தி வகுப்பு எடுத்தால் தெரியும் ஆசியர்களின் வலி

9. பணத்திற்காகவும் இலவசத்திற்காகவும் ஓட்டை விற்கும் உனக்கு எங்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது ?

10. லட்சம் கோடிகள் ஊழல் செய்தாலும் அவர்களுக்கே வக்காலத்து வாங்கி ஓட்டு போட்டு கோட்டைக்கு அனுப்பும் உனக்கு
சம்பளத்தை தவிர வேறு வருமானம் இல்லாமல்
அதற்கும் முறையாக வரி செலுத்தும் ஆசிரியர்கள் பற்றி பேச என்ன தகுதி உள்ளது ?

அப்படி ஆசிரியர்கள்தான் அதிகம் சம்பாதிக்கின்றனர்

....இந்த அரசு அவர்களுக்குத்தான் அதிகம் செய்கிறது என நீ நினைத்தால் இப்படி வெட்டியாக பேசும் நேரத்தில் படித்து கிழித்து விட்டு ஆசிரியராக வர வேண்டியதுதானே?!

செய்தி - பகிர்வு (Whatsapp)

No comments:

Post a Comment