சட்டசபையில் முதல்வர் நல்ல முடிவு அறிவிப்பார்: சத்துணவு ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, February 14, 2016

சட்டசபையில் முதல்வர் நல்ல முடிவு அறிவிப்பார்: சத்துணவு ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பில் இடம்பெற்ற சங்கங்கள் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தின.இந்த நிலையில் இந்த கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது.

அதில் இடம் பெற்ற பழனிசாமி,டெய்சி ஒரு அணியாகவும், மு.வரதராஜன், ராஜேந்திரன், ஆறுமுகம், மீனாட்சி, முருகேஸ்வரி ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிந்தனர்.வரதராஜன் தலைமையிலான சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இருந்து விலகி கொண்டனர். போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து மு.வரதராஜன் கூறியதாவது:–சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் பழனிசாமி மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவாக சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை திசை திருப்பி கொண்டு சென்றார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் கூட்டமைப்பில் இருந்து விலகி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.சட்டசபை கூட்டத் தொடரில் முதல்– அமைச்சர்எங்கள் கோரிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புகிறோம். சாதகமான அறிவிப்பு இல்லை என்றால் அடுத்தக்கட்டமாக கூடி முடிவு செய்வோம் என்றார்.

No comments:

Post a Comment