எஸ்எஸ்எல்சி தேர்வு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, February 7, 2016

எஸ்எஸ்எல்சி தேர்வு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர் வுக்கு, அரசு தேர்வுத் துறையால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற் போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் பிப்ரவரி 11, 12-ம் தேதிகளில் சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களை தேர்வுத்துறை யின் இணையதளத்தில் (www.tndge.in) அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண் ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் திருநெல் வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மைய விவரம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment