அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவருக்கென கல்வி மையம் கல்வித்துறை ஏற்பாடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, February 13, 2016

அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவருக்கென கல்வி மையம் கல்வித்துறை ஏற்பாடு

தமிழகத்தில் மாவட்டந்தோறும் ஒரு அரசுப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தை துவக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி பங்கேற்றனர்.உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜாபய் கூறியதாவது:

மாற்றுத்திறன் மாணவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து படிக்கும் விதத்தில் மாவட்டங்கள் தோறும் தலா ஒரு ஒருங்கிணைந்த மாற்றுத்திறன் மாணவர்களின் கல்வி மையம் துவங்கப்பட உள்ளது. இதுதவிர கற்பித்தல் பணிகளில் அவர்களுக்கு உள்ள குறைபாடுகளை தவிர்க்க உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. மாற்றுத்திறன் மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்து அதில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி மையம் அமைய உள்ளது. முதற்கட்டமாக திண்டுக்கல் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மையம் அமைய உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment