சிறப்பு ரயில், சுவிதா சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை சேர்க்க அனுமதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 15, 2016

சிறப்பு ரயில், சுவிதா சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை சேர்க்க அனுமதி

பண்டிகை மற்றும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நாட்களில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு, சுவிதா சிறப்பு ரயில்களில் முன் பதிவு இல்லாத பெட்டிகளை வரும் 1-ம் தேதி முதல் சேர்த்துக் கொள்ளலாம் என ரயில்வே அமைச் சகம் அனுமதி அளித்துள்ளது.

கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் ரயில்வேத்துறை சார்பில் சிறப்பு மற்றும் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் மட்டுமே இருக்கும். சுவிதா ரயிலில் காலியாக உள்ள இடங் களுக்கு ஏற்ப கட்டணம் உயர்ந்து கொண்டே செல்லும்.

முதலில் முன்பதிவு செய்யும் போது கட்டணம் குறைவாக இருக்கும். தொடர்ந்து இடங்கள் நிரம்ப நிரம்ப மீதமுள்ள காலி இடங்களுக்கு கட்டணம் பல மடங்கு அதிகரித்து கொண்டே செல்லும்.

இந்நிலையில், சிறப்பு ரயில்கள், சுவிதா சிறப்பு ரயில்களில் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம் என மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. முன்பதிவு இல்லாத பெட்டிகள் 2 முதல் 4 பெட்டிகள் வரையில் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment