சத்துணவில் பயறு தட்டுப்பாடு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, February 7, 2016

சத்துணவில் பயறு தட்டுப்பாடு !

சத்துணவு மையங்களில், பயறு வகைகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், மாணவர்களுக்கு, மாதத்தின், முதல் மற்றும், மூன்றாவது செவ்வாய்க்கிழமைகளில், தலா, 20 கிராம் வேக வைத்த கறுப்பு கொண்டை கடலை; இரண்டாவது மற்றும், நான்காவது வியாழக்கிழமை, பச்சை பயறு வழங்கப்படுகிறது.

இவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, சத்துணவு மையங்களுக்கு வினியோகம் செய்கிறது. தற்போது, பயறு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, கறுப்பு கொண்டை கடலை, 550 டன்; பச்சை பயறு, 600 டன் வாங்க, நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:சேமிப்பு கிடங்குகளில், போதிய அளவுக்கு பயறு வகைகள் இருப்பு உள்ளன; தேவைக்கு ஏற்ப வினியோகம் செய்யப்படுகின்றன. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், பயறு கொள்முதல் செய்ய கெடுபிடி அதிகம் இருக்கும். எனவே, ஐந்து கோடி ரூபாய்க்கு, 1,150 டன் பயறு வகைகள் வாங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment