முதியோர் கட்டண சலுகை ரத்து: ரயில்வே நிர்வாகம் திட்டம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 9, 2016

முதியோர் கட்டண சலுகை ரத்து: ரயில்வே நிர்வாகம் திட்டம்!

ரயில்வே துறைக்கு ஏற்பட்ட ரூ.1400 கோடி நஷ்டத்தை
சமாளிக்க, 'ஏசி' பெட்டியில் முதியோருக்கான கட்டணசலுகையை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்ட நிலையில், முதல் வகுப்புக்கு மட்டும் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.ரயில்களில் பயணிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் இதுவரை ரூ.1400 கோடி இழப்பு
ஏற்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதை சமாளிக்க, 'ஏசி' பெட்டிகளில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைளை ரத்து செய்ய வேண்டும் எனபரிந்துரைத்தது.இதற்கு பயணிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தென்னக ரயில்வே பயணிகள் சங்க நிறுவனர் பத்மநாதன்கூறுகையில், ''கட்டணசலுகைகள் தொடர வேண்டும்.அல்லது மாற்று ஏற்பாடாக மூத்த குடிமகனுக்கு 65 வயதுக்கு மேலும், குடிமகளுக்கு 60வயதுக்கு மேலும் கட்டண சலுகைகளை அறிவிக்கலாம்'' என்றார்.இதற்கிடையே, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பால், முதற்கட்டமாக முதல்வகுப்பு 'ஏசி' பெட்டிக்கு மட்டும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு ரயில்வேபட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது

No comments:

Post a Comment