ஆசிரியர் & அரசு ஊழியரின் வேலைநிறுத்தம் ஏன்? UPS-ன் பயன் தெரியும். CPS-ன் பாதிப்பு தெரியுமா??? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 17, 2016

ஆசிரியர் & அரசு ஊழியரின் வேலைநிறுத்தம் ஏன்? UPS-ன் பயன் தெரியும். CPS-ன் பாதிப்பு தெரியுமா???

UPS-ன் பயன் தெரியும்.
CPS-ன் பாதிப்பு தெரியுமா???
இன்று நாம் வாட்சப் பேஸ்புக் என்று மாறிவிட்டாலும் ஒரு காலத்தில் காடுகளில் வேட்டையாடிய சமூகம் தானே! அதன் வழியாய் சிறு உதாரணம்.
‪#‎ஓய்வூதியம்_PENSION‬:
வேட்டையாடிய இறைச்சியில் சில துண்டுகளை உப்பிட்டு (உப்புக்கண்டம்) ஓய்வுக் காலத்திற்காக பத்திரப்படுத்தி எடுத்து வைப்பதைப் போன்றது.
‪#‎பங்கேற்பு_ஓய்வூதியம்_CPS‬:
வேட்டையாடிய இறைச்சியை உண்பதற்கு முன்பே ஒரு பகுதியை (10%) எடுத்து பாதுகாக்கிறேன் என்ற பேரில் படுத்திருக்கும் முதலையின் (Share market) வாயின் உள் நுழைந்து வைத்து வருவதாகும்.
நீங்களே சொல்லுங்க மக்கா!
யாரோட உழைப்ப யாரு திங்கிறது?
முதலை என்ன சைவமா?
நம்மலயும் சேத்துல தின்னுபுடும்!
போராட ஏன் வந்தோமென இப்பபுரியுதா!
மின்சாரம் இல்லாதப்ப பயன்படும் UPS போன்று,
‪#‎சம்சாரமும்_சந்ததியும்_இல்லேனாலும்_உதவுறது_PENSION‬!
அதை இல்லையென்று சொல்லி நம் & உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை CPS என்னும் தோலைப் போர்த்தி சூனியமாக்குவதை உடன் நிறுத்தக் கோரியே இவ்வரலாற்றுப் போர்-ஆட்டம்!

(தோலுரிப்புகள் தொடரும். . .)

சந்தியைக் காக்கும் களத்திலிருந்து,
த.நா ஆ.ப ஆசிரியர் கூட்டணியின்,

நன்றி : செல்வ.ரஞ்சித்குமார் (செ.கு.உ) பொன்னமராவதி.

No comments:

Post a Comment