10ம் வகுப்பு கல்வித்தகுதி ஆக.,1 வரை பள்ளியில் பதிவு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 22, 2016

10ம் வகுப்பு கல்வித்தகுதி ஆக.,1 வரை பள்ளியில் பதிவு !

பத்தாம் வகுப்பு சான்றிதழ்களை ஆக.,1 வரை பள்ளிகளிலேயே பதிவு செய்யலாம் என, மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை
வாய்ப்பு அலுவலக பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சான்றிதழ் வழங்கும் நாளில், மாணவர்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரங்களுடன் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டி.ஆர்.ஓ., பாஸ்கரன் தெரிவித்தாவது: ஜூலை 18 முதல் பள்ளிகளில் பதிவுப்பணி துவங்கியுள்ளது. ஆக.,1வரை இப்பணிகள் நடைபெறும். மாணவர்கள் மதிப்பெண் பெற்ற நாளே பதிவு மூப்பு தேதியாக பதிவு செய்து கொள்ளப்படும். மேலும் http:tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.

No comments:

Post a Comment