பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 11–ந்தேதி ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 4, 2016

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 11–ந்தேதி ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு முடிவுகள் எடுக்கப்பட்டன. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் அமைத்தல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்துதல், 8–வது ஊதிய மாற்றத்திற்கான குழு அமைத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்–அமைச்சருக்கு மின்னஞ்சல் (இ–மெயில்) அனுப்பவேண்டும். அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கவேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஆகஸ்டு 11–ந்தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களுக்கு மேல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். தொகுப்பூதியம் – தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, வருமானவரி உச்சவரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2–ந்தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும்போது, தமிழகத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment