18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகளே என்று அனைத்துலக குழந்தைகள் உரிமைப் பறைசாற்றம் சொல்கிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 3, 2016

18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகளே என்று அனைத்துலக குழந்தைகள் உரிமைப் பறைசாற்றம் சொல்கிறது.

18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகளே என்று அனைத்துலக குழந்தைகள் உரிமைப் பறைசாற்றம் சொல்கிறது. நமது கல்விக் கொள்கையாளர்கள் வசதியாக நடுவில் பாதி வயதை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். 4 மற்றும் 5 வயதுக் குழந்தைகளுக்கான முன்பருவக் கல்வியையும் 15 வயது முதல் 18 வயது வரையிலான இடைநிலைக் கல்வியையும் அடிப்படை உரிமையாக்காமல் அரைவேக்காட்டு கல்வி உரிமைச் சட்டத்தை இயற்றி இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு துரோகம் செய்யும் கல்விக்கொள்கைகளை ஆட்சியாளர்கள் கைவிட்டு பள்ளி முன்பருவக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் அனைவருக்கும் கட்டணமில்லாமல் அரசின் பொறுப்பில் வழங்கும் வகையில் புதிய கல்வி உரிமைச் சட்டம் இயற்றவேண்டும். இதற்காக வழக்குத் தொடுத்துள்ள மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் அமைப்புக்கு துணைநிற்போம். ஆசிரியர் இயக்கங்களும் இக்கோரிக்கையை அரசிடம் முன்வைத்தால் இக்கோரிக்கை வலிமையடையும்.

முத்துக்குமரன் தலைமையிலான சமச்சீர்க்கல்விக் குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் நிறைவேற்றுவோம் என்று 2011 ஆம் ஆண்டிலேயே தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய கல்வி அமைச்சர் அறிவித்தார். ஆனால் இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை. எனவே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கவேண்டும் என்ற சமச்சீர்க் கல்விக் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற தமிழக முதல்மைச்சர் உடனடிக் கவனம் செலுத்தினால் குழந்தைகளுக்கும் மீண்டும் ஆறாவது முறையாக அவரை ஆட்சியில் அமர்த்தியிருக்கும் தமிழக மக்களுக்கும் நன்மை கிடைக்கும்.

(முதல் பக்க தலைப்பு செய்தியாக வெளியிட்ட காலைக்கதிர் நாளிதழுக்கு நன்றி)

No comments:

Post a Comment