தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் தெரிவித்திருப்பது:
கல்விக் குழு (என்.சி.டி.இ.) அனுமதியுடன் நடத்தப்படும் இளங்கல்வியியல் (பி.எட்.), கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) இரண்டாண்டுப் பட்டப் படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை ஜூலை 20-ம் தேதி காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் நடைபெறவுள்ளது. தகுதியுடையவர்கள் தங்களது அனைத்து மூலச் சான்றிதழ்கள் மற்றும் முதல் தவணைக் கட்டணத் தொகை ரூ. 26,500 ரொக்கத்துடன் நேரில்வரலாம்.
கல்வித் தகுதி விவரங்களை www.tamiluniversity.ac.in என்ற இணையதள முகவரியிலிருந்து பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04362-226720 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment