தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலர் ராம் மோகன் ராவ் வெளியிட்ட அறிவிப்பில், ''சென்னை ஆணையர் சந்திரமோகன் வருவாய்த்துறை அரச் செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொல்லியல் துறை ஆணையர் கார்த்திகேயன் சென்னை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பட்டுப்புழு வளர்ப்பு மேப்பாட்டு இயக்குநர் (பொறுப்பு) வி.சாந்தா பெண்கள் மேம்பாட்டு இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆட்சியர் ஹரிஹரன் கோவை மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் பாஸ்கரன் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment