குழந்தை வளர்ப்பு, கல்வி முறையில் பெற்றோர் கவனம் அவசியம்: இயக்குநர் சமுத்திரக்கனி கருத்து - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 12, 2016

குழந்தை வளர்ப்பு, கல்வி முறையில் பெற்றோர் கவனம் அவசியம்: இயக்குநர் சமுத்திரக்கனி கருத்து

குழந்தை வளர்ப்பு, கல்வி முறை யில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கி நடித்த ‘அப்பா' திரைப் படம் சமீபத்தில் வெளியானது. அதையொட்டி இயக்குநர் சமுத் திரக்கனி மற்றும் அப்பா திரைப்படக் குழுவினர் நேற்று கோவையில் திரைப்படம் பார்க்க வந்தவர்களை சந்தித்தனர். அத்திரைப்படத்தின் மையப் பொருளான குழந்தை வளர்ப்பு, கல்விமுறை குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குநர் சமுத்திரக்கனி பதில் அளித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘‘அப்பா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களை மட்டுமே நம்பி இந்த முயற்சியை மேற்கொண்டேன். நல்ல செய்திகளை உண்மையாகக் கூறியதாலேயே அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். படம் யாருக் கானதோ அவர்களிடம் சரியாகச் சென்று சேர்ந்துள்ளது. கல்வி முறை மற்றும் குழந்தைகள் வளர்ப்பில் உள்ள சிக்கல்களை ஒவ்வொருவரும் சரியாகப் புரிந்துகொண்டு குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

‘அப்பா’ திரைப்படத்தைப்போல் மேலும் பல திரைப்படங்களை எடுக்க ஆசையாகத்தான் இருக் கிறது. ஆனால் என்னை நான் நிலைநிறுத்திக்கொள்ள வேண் டிய தேவையும் உள்ளது. திருட்டு விசிடி பிரச்சினையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மனது வைத்தால் விரைவில் தீர்வு காணலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment