ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் வெள்ளிக்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அதன் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக இருக்கும் முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளம் விரிவுரையாளர் ஆகிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காக வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள், வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் இம்மாதம் 30 ஆம் தேதி மாலை 5.30 மணி வரை திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 30 ஆம் தேதி மாலை 5.30 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment