கற்றல் கற்பித்தலில் பல புதுமையான யோசனைகள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் பயிலரங்கில் கலந்து கொண்டேன்
ஆனால்
என் எதிர்பார்ப்பிற்கும் அதிகமான அனுபவத்தைப் பெற்றேன்
கலைகள் பலவற்றைக் கற்றுக் கொண்டு
அதை மாணவர்களுக்கும் கற்பித்து
அக் கலைகள் மூலம் பாடங்களையும் போதிக்கும்
திரு.தெருவிளக்கு கோபிநாத்
184 மாணவர்களை இந்தாண்டு சேர்த்த மதுரை திரு.தென்னவன் அவர்கள்.
மாணவர்களுக்காகவே பொம்மலாட்ம் கற்று
ஆதரவற்ற அந்த மாணவர்களின் அன்னையாக இருக்கும்
திரு. தாமஸ்
குழந்தைகளை குதூகலப்படுத்தும் குத்துப் பாடல்கள் மூலம் கல்வி புகட்டும்
திரு. பாரி மன்னன்
கடிதம் மூலம் கிராமத்தையே மாற்றிய
திரு. வசந்த்
தமிழ் மொழியை உலகம் அறிய முனைப்பு காட்டி செயலாற்றும்
விக்கிபீடியா திருமதி. பார்வதி ஆசிரியை அவர்கள்
இனிமையான குரல் வளத்தால்
அருமையாக பாடல் பாடி
நடனம் ஆடி
கற்பிக்கும்
திருமதி. தேன்மொழி ஆசிரியை அவர்கள்
நடிப்புத் திறனால் அசர வைத்து
இந்த வயதில் எப்படி இவ்வளவு ஆற்றல்
# திருமதி.அல்லி ஆசிரியை அவர்கள் #
.
தமிழ் உச்சரிப்பு, பேச்சில் இருந்த கருத்து,
வார்த்தைகளின் ஆற்றல்
கேட்க கேட்க இனிமை
கலாம் ஐயாவின் வழியில்
தானும் மாறி
மாணவர்களையும் மாற்றும்
திருமதி.சபரிமாலா ஆசிரியை அவர்கள்
யோசித்துக் கூட பார்க்க முடியாத
தியாகத்தை செய்து
ஆடலிலும் அசத்திய
செல்வி.மஹா ஆசிரியை அவர்கள்
அரசு பணத்தையே தனதாக்கிக் கொள்ள நினைக்கும் நபர்களுக்கு மத்தியில்
தனது சொந்த பணத்தில் பள்ளிக் கட்டிடம் கட்டிய
திருமதி.கிருஷ்ணவேணி ஆசிரியை அவர்கள்
ICT மூலம் கற்பித்தலில் புதுமையை காட்டிய
திருவாளர்கள்.
திலிப்
குரு
சக்திவேல்
போன்றோர் உடன்
எண்ணற்ற சப்தம் இல்லாமல் சாதனை செய்து வரும் ஏனைய பயிலரங்கில் கலந்து கொண்ட அத்தனை ஆசிரிய பெருமக்களை கண்டும் உங்களின் அர்பணிப்பைக் கண்டு
சக ஆசிரியனாக பெருமை கொள்கிறேன்
நான் தேடிய ஆசிரிய நண்பர்கள் கிடைத்து விட்டனர்
உங்களின் மூலம் என்னையும் பட்டை தீட்டிக் கொள்வேன்
மேலும்
சிறப்பு விருந்தினர்களில்
💐அடடா ஆசிஸ் சார்
இந்து தினசரியில் தான் முதன் முதலில் உங்களைப் பற்றி அறிந்தேன்
புரட்சிகரமான சிந்தனையை எவ்வளவு எளிதாக
சாதாரணமாக மனதிற்குள் விதைத்து விட்டீர்
💐புதிய தலைமுறை கல்வி
கணேசன் சார்
2 நாட்களும் நீங்களும் உற்சாகமாக இருந்து
எங்களையும் உற்சாகமாக மாற்றி விட்டீர்
💐விஷ்ணுபுரம் சரவணன் சார்
கதை சொல்லும் ஆர்வத்தையும்
கதை கேட்கும் ஆர்வத்தையும்
புதிய கோணத்தில்
மனதில் உருவாக்கி விட்டீர்
மூவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
💐இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து
ஆசிரியர்களின் திறமைக்கு மேடை உருவாக்கி
அடையாளப்படுத்திய
ஆளுமைத் திறன்
திரு.சதீஸ் சார்
உங்கள் அனைவரையும் TT News வணங்கி வாழ்த்துகிறது.
நன்றி :ஆசிரியர்கள் குழு &
திரு.ர.காளிதாஸ்
(பெரியகுளம்)
No comments:
Post a Comment