டிசம்பருக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கிடைப்பது சந்தேகம்: ஆதார் அட்டை 'ஸ்கேன்' கருவிகள் வழங்குவதில் சுணக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 17, 2016

டிசம்பருக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கிடைப்பது சந்தேகம்: ஆதார் அட்டை 'ஸ்கேன்' கருவிகள் வழங்குவதில் சுணக்கம்

ஆதார் அட்டையை, 'ஸ்கேன்' செய்ய தேவையான, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவியை ரேஷன் கடைகளுக்கு வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், வரும் டிசம்பருக்குள், பொதுமக்களுக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கிடைப்பது சந்தேகமே என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகள் வழங்கி, 11 ஆண்டுகளாகிறது. இதனால், அவை கிழிந்து, கந்தல் கோலத்தில் உள்ளன. அதனால், ஸ்மார்ட் கார்டு வடிவில், நவீன ரேஷன் கார்டுகளை, இந்த ஆண்டு
இறுதிக்குள் வழங்க, உணவு துறை முடிவு செய்தது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, பாயின்ட் ஆப் சேல் என்ற கருவி வழங்கப்பட்டு
வருகிறது. ரேஷன் கார்டுதாரர்கள், 'ஆதார்' அட்டையை, ரேஷன் ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும். கடை ஊழியர்கள், அதை, பாயின்ட் ஆப் சேல் கருவியில் ஸ்கேன் செய்த பின், கார்டுதாரரிடமே வழங்கி விடுவர். ஆதார் விபரங்கள் தொலைதொடர்பு மூலம், சென்னையில் உள்ள உணவு வழங்கல் துறையின், 'சர்வரில்' பதிவாகும். அதன் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிட்டு, வழங்கப்பட உள்ளது.

கேள்வி எழுந்துள்ளது

தமிழகத்தில் உள்ள, 32மாவட்டங்களில், 34 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. தற்போது, 14 மாவட்ட ரேஷன் கடைகளுக்கு மட்டுமே, பாயின்ட் ஆப் சேல் கருவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு முடிவடைய, ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால், திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில், மாவட்ட உணவு வழங்கல் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில், ''ஆதார் அட்டை வழங்கும்
பணி முழுமை பெற்று, பதிவுகள் நிறைவு செய்யப்பட்ட பின் தான், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும்,'' என்றார். விரைவாக...இது குறித்து, உணவு மற்றும்கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனியார் நிறுவனம் மூலம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நிறுவனமே, ரேஷன் கடைகளுக்கு, பாயின்ட் ஆப் சேல் கருவியை வழங்கி வருகிறது.இந்த மாத இறுதிக்குள், அனைத்து மாவட்ட ரேஷன்கடைகளுக்கும், அக்கருவியை வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது, பணி தாமதமாகி வருகிறது. இது குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி, விரைவாக கருவிகள் வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில், அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதே நேரத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் போது, ஒருவரே பல ரேஷன் கார்டுகளை வாங்க முடியாது. இதனால், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பாதிக்கலாம் என, ஆளுங்கட்சி கருதுகிறது. எனவே தான், ரேஷன் கடைகளில், பாயின்ட் ஆப் சேல் கருவி வழங்கும் பணி தாமதமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment