மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை, சிறுபான்மையினருக்கு எதிராகவும், இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையிலும் உருவாக்கபட்டுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது. மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில்,
கல்விக்கொள்கையின் 43 பக்க அறிக்கை பற்றிய விவாதம், சென்னை சாந்தோமில் உள்ள தமிழக கத்தோலிக்கக் கல்வி கழகத்தில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பலர், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை ஹிந்துத்துவாவைப் பிரதிபலிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த புதிய கல்விக்கொள்கையானது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாகவும் கல்வியாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கல்விக்கொள்கையை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக விமர்சித்தனர். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை உருவாக்கும் குழுவில், கல்வியாளர்கள் யாரும் இடம்பெறவில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment