உயர் கல்வியை அறிமுகப்படுத்த ... புதிய திட்டம்! பள்ளிக் கல்வித் துறை முனைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 7, 2016

உயர் கல்வியை அறிமுகப்படுத்த ... புதிய திட்டம்! பள்ளிக் கல்வித் துறை முனைப்பு

புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயிலும் 80 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு, உயர்கல்வியை அறிமுகப்படுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

புத்தக அறிவியலின்படி, சுட்டியாக இருக்கும் பள்ளிக் குழந்தைகள்,

வகுப்பறையை தாண்டி பொது அறிவு என்று வரும்போது பின்தங்கி விடுகின்றனர்.

குறிப்பாக, உயர்கல்வியை பற்றி புரிதல் இல்லாமல் உள்ளனர். அடுத்து என்ன படிக்கப் போகிறோம். எந்த உயர்ந்த இலக்கினை நோக்கி வகுப்பறையில் பயணிக்கப் போகிறோம் என்பது அறவே தெரிவதில்லை. பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக குழந்தைகள் பார்க்கப்படுகின்றனர்.

புதிய திட்டம்

இப்பிரச்னையை போக்கும் பொருட்டு, புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியை அறிமுகப்படுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி, ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று, அங்குள்ள படிப்புகள், பாடம் நடத்தும் முறைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

உயர் கல்வி அறிமுகம்

இதேபோல், மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு அருகில் ஒரு கல்லுாரியை தேர்வு செய்து அங்குள்ள உயர் கல்வி படிப்புகள் குறித்து அறிமுகம் செய்யப்படும். இதற்கான தேதியை அந்தந்த பள்ளிகள், தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

புதுச்சேரி பிராந்தியத்தில், இத்திட்டத்தின்படி, 45 அரசு மேல்நிலைப் பள்ளிகளை, 278 ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பார்வையிட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

காரைக்கால் பிராந்தியத்தில் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் பற்றி, 91 ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், மாகியில் நான்கு

உயர்நிலைப் பள்ளிகள் குறித்து 13 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் தெரிந்து கொள்ள திட்டமிடப்பட்

டுள்ளது.

௮௦ ஆயிரம் பேர் இலக்கு

அரசு பள்ளிகளில் தற்போது 80 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி குறித்து அடிப்படை அறிமுகம் வேண்டும் என்ற முனைப்போடு, பள்ளி கல்வித்துறை முழு வீச்சில் இத்திட்டத்தை தீட்டியுள்ளது.

No comments:

Post a Comment