முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்...! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 7, 2016

முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்...!

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட,புதிய கல்விக் கொள்கையில்,முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது.இது,கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய கல்விக் கொள்கை குறித்து,ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. முரண்பட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,புதிய கல்வி கொள்கைகுறித்து, 28பக்கங்கள் அடங்கிய,முக்கிய சாராம்சங்கள் நிறைந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.இதில்,பத்தாம் வகுப்பு வரை,முக்கிய பாடப்பிரிவுகளான,கணிதம்,அறிவியல் மற்றும் ஆங்கில பாடத்துக்கு,ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.

No comments:

Post a Comment