INSPIRE AWARD : மது அருந்தினால் டூவீலர் ஓடாது - அரசு பள்ளி மாணவரின் பலே கண்டுபிடிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 12, 2016

INSPIRE AWARD : மது அருந்தினால் டூவீலர் ஓடாது - அரசு பள்ளி மாணவரின் பலே கண்டுபிடிப்பு

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் 50 சதவீதத்துக்கு மேல் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் பலி ஏற்படுவதோடு, உடல் உறுப்புகளையும் இழக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தடுப்பதற்காக மது அருந்தி விட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தாலே, இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத வகையில் ஒரு கருவியை சிவகங்கை மாவட்டம், திருவேலங்குடி அரசு பள்ளி 9ம் வகுப்பு  மா ணவர் பிரேம்குமார் கண்டுபிடித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்காக மது போதையால் ஏற்படும் உயிர் இழப்பைத் தடுக்க ஒரு கருவியை உருவாக்கினேன்.

இக்கருவியில் பொருத்தப்பட்டுள்ள ஆல்கஹால் சென்சார் மது வாடையை உணரும். இத்துடன் கெப்பாசிடர், டிரான்சிஸ்டர் சேர்ந்த ஒரு இன்டகிரேட் சர்க்யூட் இணைக்கப்பட்டுள்ளது. மது வாடையை உணர்ந்தவுடன் சாவி போட்டு ஸ்டார்ட் செய்யும் இடத்திற்கு (இக்னீசியன்) செல்லும் மின்சாரத்தை தடுத்து விடும். இதனால் இன்ஜின் இயக்கம் தானாக நின்று விடும். மது குடித்து விட்டு, எவ்வளவுதான் ‘உருண்டு புரண்டாலும்’ வாகனம் ஸ்டார்ட் ஆகாது. இக்னீசியனுடன் இந்த கருவியை இணைத்துஸ்டியரிங்கிற்கு கீழே வைத்து கொள்ளலாம். இந்த கருவியை டூவீலரிலும் வைக்கலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment