TRB:ஜூனியர் லெக்சரர், லெக்சரர், ஜூனியர் லெக்சரர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.15-7-2016-ந் தேதி முதல் 30-7-2016-ந் தேதிவரை விண்ணப்பம் பெறலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 4, 2016

TRB:ஜூனியர் லெக்சரர், லெக்சரர், ஜூனியர் லெக்சரர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.15-7-2016-ந் தேதி முதல் 30-7-2016-ந் தேதிவரை விண்ணப்பம் பெறலாம்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு சீனியர் லெக்சரர், லெக்சரர், ஜூனியர் லெக்சரர் போன்ற பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சீனியர் லெக்சரர் பணிக்கு 38 இடங்களும், லெக்சரர் பணிக்கு 166 இடங்களும்,ஜூனியர் லெக்சரர் பணிக்கு 68 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 272 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பெண்களுக்கு 30 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாட வாரியாக உள்ள பணியிடங்கள் விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 31-7-2016 தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்புடன், முதுநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெறலாம். அதை நிரப்பி மீண்டும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலேயே ஒப்படைக்க வேண்டும். 15-7-2016-ந் தேதி முதல் 30-7-2016-ந் தேதிவரை விண்ணப்பம் பெறலாம். விண்ணப்பங்களை தபால் மற்றும் இதர முறைகளில் அனுப்பக்கூடாது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.250-ம், மற்றவர்கள் ரூ.500-ம் தேர்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதை இந்தியன்வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி கிளைகளில் குறிப்பிட்ட செலானை நிரப்பி செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 30-7-2016-ந் தேதி கடைசி நாளாகும். இதற்கான எழுத்து தேர்வு 17-9-2016 அன்று நடைபெறுகிறது. இது பற்றிய விவரங்களை www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment