பாரா மெடிக்கல்’ படிப்புகளில் 2,400 இடங்கள் குறைந்தது ஏன்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 25, 2016

பாரா மெடிக்கல்’ படிப்புகளில் 2,400 இடங்கள் குறைந்தது ஏன்?

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு, நடப்பு ஆண்டில், 2,400 இடங்கள் குறைந்துள்ளன. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு அடுத்ததாக, பாரா மெடிக்கல் எனப்படும், மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு, பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இதில், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் - பிசியோதெரபி உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகள் உள்ளன.

அரசிலும், தனியார் நிறுவனங்களிலும் உடனடி வேலை கிடைப்பதால், மாணவர்களிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது. இதற்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள், சுயநிதி கல்லுாரிகளிலும், 7,190 இடங்கள் என, மொத்தம், 7,745 இடங்கள் இருந்தன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இதில், 5,303 இடங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளன. 2,400 இடங்களுக்கு மேல் குறைந்துள்ளது, மாணவர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு காரணங்களால், சில தனியார் கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு, 2,400 இடங்கள் வரை குறைந்துள்ளன. குறைகளை நிவர்த்தி செய்து, மீண்டும் கல்லுாரிகள் அனுமதி பெறும் பட்சத்தில், இந்த இடங்களையும் சேர்த்து, அடுத்த கட்ட கலந்தாய்வில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment