ஓபிசி இட ஒதுக்கீடு சலுகைக்கான வருமான உச்சவரம்பு உயர்கிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 29, 2016

ஓபிசி இட ஒதுக்கீடு சலுகைக்கான வருமான உச்சவரம்பு உயர்கிறது.

இதர பிற்பட்ட வகுப்பினர் (ஓபிசி) இட ஒதுக்கீடு சலுகை பெறுவது தொடர்பான வருமான உச்ச வரம்பை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர ஓபிசி பிரி வினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. ரூ.6 லட்சத்துக்கு மேல்
வருமானம் ஈட்டும் ஓபிசி பிரிவினர் வசதி படைத்தவர்கள் (க்ரீமி லேயர்) என வகைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை தரப்படுவதில்லை.


இந்த நடைமுறை காரணமாக, மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவீத இடங்களில் கணிசமான இடங்களை நிரப்ப முடியாத நிலை இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே ஓபிசி பிரிவினரில் வசதி படைத்தோருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்துவது குறித்து மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் அசோக் சைனி கூறும்போது, “அரசு வேலை, கல்வி நிறுவனங் களில் சேர ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன். ஆனால் இதன் மூலம் 12 முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். இந்த சலுகையைப் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு நிர்ண யிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே இந்த வருமான உச்சவரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம்” என்றார்.
தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் 2006-ல் நடத்திய கணக் கெடுப்பின்படி, மக்கள் தொகை யில் 1980-ல் 52 சதவீதமாக இருந்த ஓபிசி பிரிவினரின் எண்ணிக்கை 41 சதவீதமாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment