புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க உத்தரவு: தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பயன்பெறுவர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 29, 2016

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க உத்தரவு: தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பயன்பெறுவர்

பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு
பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படு கின்றனர். மத்திய அரசில் புதிய ஓய்வூதிய திட்டம், 2004 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ராணுவத் தினருக்கு மட்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.. இதற்கு இணையான தொகையை அரசு தன் பங்காக செலுத்தும். இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் சிபிஎஃப் என அழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதிய நிதி எண் கொடுக்கப்பட்டு அதில் இரு தொகைகளும் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு சிபிஎப் கணக்கில் சேரும் தொகை, அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது மொத்த தொகையில் 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதிய மாக வழங்கப்படும். புதிய ஓய் வூதிய திட்டத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக கிடைக்கும் என்றாலும் எவ்வளவு கிடைக்கும் என்பதை உத்தரவாதத்துடன் சொல்ல இயலாது. மேலும், இந்த திட்டத்தில் பழைய அரசு ஊழியர் களுக்கு வழங்கப்படும் பணிக் கொடை (கிராஜுவிட்டி), குடும்ப ஓய்வூதியம் போன்ற பயன்களும் கிடையாது.
தமிழகத்தில் சுமார் 4.50 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத் திருக்கிறது.
இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர் களுக்கும் பணிக்கொடை வழங்க மத்திய அரசு கடந்த மாதம் 29-ம் தேதி ஓர் உத்தரவை பிறப்பித்துள் ளது. அதில், 1.1.2004-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையைப் பெற தகுதியுடையவர் ஆவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், நிதித்துறை செயலாளர்களுக்கும் மத்திய பணியாளர் நல அமைச்ச கத்தின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூ தியதாரர் நலத்துறை இயக்குநர் கடந்த 26-ம் தேதி தகவல் அனுப்பி யுள்ளார்.
பணிக்கொடை என்பது ஓர் ஊழியரின் பணிக்காலத்துக்கு ஒவ்வோர் ஆண்டுக்கும் அரை மாத சம்பளம் என்ற வீதத்தில் கணக் கிடப்படும். அதாவது, ஒரு ஊழியர் 20 ஆண்டுகள் பணியாற்றி இருந் தால் தோராயமாக அவரின் 10 மாத சம்பளம் பணிக்கொடையாக கிடைக்கும். தற்போது பணிக் கொடைக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உள்ளது.
அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் இரா.பாலசுப்பிர மணியன்: ஏற்கெனவே மறுக்கப்பட்ட உரிமையை அரசு மீண்டும் வழங்கி யுள்ளது. அரசு ஊழியர்களுக்கு பணிக் கொடை வழங்கும் முடிவை மேலோட்ட மாக பார்த்தால் வரவேற்கத்தக்கதாக தோன்றும். ஊழியர்களின் போராட் டத்தை திசைதிருப்பும் முயற்சியாகவே இதை பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்ட மைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரைமன்ட்: புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக் கும் பணிக்கொடை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்கிறோம். தமிழக அரசும் மத்திய அரசை பின்பற்றி இதுதொடர்பாக உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். புதிய ஓய்வுதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காட்டிய வேகத்தை பணிக்கொடை வழங்கும் உத்தரவிலும் காட்ட வேண்டும்.

1 comment:

  1. Great news and great relief every govt employee welcome this news now we are no way less trb

    ReplyDelete