அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது ! ஆசிரியர்கள் குரல்கள் ஒடுக்கப்படுகின்றனவா ? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 31, 2016

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது ! ஆசிரியர்கள் குரல்கள் ஒடுக்கப்படுகின்றனவா ?

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ,

அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது.

தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள்

No comments:

Post a Comment