உயர் நீதிமன்ற காலி பணியிடங்களுக்காக, நடந்த எழுத்து தேர்வு முடிவுகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 29, 2016

உயர் நீதிமன்ற காலி பணியிடங்களுக்காக, நடந்த எழுத்து தேர்வு முடிவுகள்

உயர் நீதிமன்ற காலி பணியிடங்களுக்காக, நடந்த எழுத்து தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்த பேட்டி:உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, இரண்டு நாட்களாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் எழுத்து தேர்வுகள் நடந்தன. டி.என்.பி.எஸ்.சி., மீது நம்பிக்கை வைத்து, தேர்வை நடத்தி தரும்படி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது, எங்களுக்கு கிடைத்த வெற்றி.

நேற்று முன் தினம் நடந்த பதிவாளரின் நேர்முக உதவியாளர் பணிக்கு, 310 பேர் தேர்வு எழுதியுள்ளனர். நேற்று நடந்த தேர்வில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டைப்பிஸ்ட், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, 317 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த பணிகளுக்கு தமிழகம் முழுவதும், 57 ஆயிரத்து, 512 பேர் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.தமிழக அரசிடம் இருந்து காலி பணியிடங்களின் எண்ணிக்கை, துறை வாரியாக வந்தால், அதற்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த தயாராக உள்ளது. நவம்பர் மாதம் குரூப் - 4 தேர்வு நடத்த உள்ளோம். டி.என்.பி.எஸ்.சி., மூலம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி பணியாளர்கள் தேர்வு நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment