ரெயிலில் 92 பைசா இன்சூரன்ஸ் பிரிமீயர் திட்டம் வரும் 31-ந்தேதியில் இருந்து அறிமுகமாகிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 26, 2016

ரெயிலில் 92 பைசா இன்சூரன்ஸ் பிரிமீயர் திட்டம் வரும் 31-ந்தேதியில் இருந்து அறிமுகமாகிறது.

ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென விபத்து ஏற்பட்டால், அவர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்கும். இது ஒவ்வொரு விபத்தை பொறுத்து இழப்பீடு மாறுபடும்.
இதனால் ரெயில்வே துறைக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை
சரிகட்டுவதற்காக பயணிகளுக்கான இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டின்போது மத்திய மந்திரி சுரேஷ் பிரபு அறித்திருந்தார்.
இந்த திட்டம் வரும் 31-ந்தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதன்படி, ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணையத்தளமான IRCTC-ல் டிக்கெட் பதிவு செய்யும்போது ஒவ்வொரு நபர்களுக்கு 92 காசுகள் இன்சூரன்ஸ் பிரிமீயமாக பிடித்தம் செய்யப்படும். இந்த பிரிமீயர் புறநகர் ரெயில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் அடங்கும்.
ஆனால், ஐந்து வயதிற்குட்பட்டோருக்கும், வெளிநாட்டு பயணிகளுக்கும் அடங்காது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருப்போரும் இந்த வசதியை பெறலாம்.
இந்த பிரிமீயம்படி தற்செயலான ரெயில் விபத்திற்குள்ளாகி, உயிரிழக்க நேரிட்டால் 10 லட்சம் ரூபாய் இழப்பிடாக வழங்கப்படும். உடலின் பாகங்கள் செயலிழ்ந்தால் 7.5 லட்சம் ரூபாயும், சிறிய காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அதேபோல் துப்பாக்கி சூடு, தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
ஐசிசிஐ லம்பா்டு ஜெனரல் இன்சூரன்ஸ், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிவற்றிளுடன் இணைந்து IRCTC  இந்த திட்டத்தை செய்ய இருக்கிறது.

No comments:

Post a Comment