தமிழகத்தில் மழை நீடிக்கும் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 27, 2016

தமிழகத்தில் மழை நீடிக்கும் !

தமிழகத்தில் வெப்பநிலை குறைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்
கூறியதாவது: மத்திய மேற்கு வங்கக் கடலில், வடக்கு ஆந்திர கடற்கரைக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளதால், வட மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும்; தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், இரு நாட்களுக்கு மழை பெய்யலாம். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில நேரங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment