ஏ.டி.எம். மெஷின்களில் மொபைல் எண் பதிவிடும் வசதி ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 31, 2016

ஏ.டி.எம். மெஷின்களில் மொபைல் எண் பதிவிடும் வசதி !

ஏ.டி.எம். மெஷின்களிலேயே வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண்களைப் பதிவுசெய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களிடமுள்ள மொபைல் எண்ணை வங்கிக் கணக்கில் இணைப்பது அவசியமாகிறது. ஏனெனில், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் போது எஸ்.எம்.எஸ். மூலமாக அதற்கான
தகவல் கிடைப்பதோடு, வேறு எவரேனும் நம்முடைய ஏ.டி.எம். கணக்கிலிருந்து பணத்தை எடுத்தாலும் நமக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் கிடைத்துவிடும். இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்போது வங்கிகளில் இந்த எஸ்.எம்.எஸ்.களை காண்பித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். அதேபோல, ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும்போதும் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு OTP எஸ்.எம்.எஸ். வருகிறது. அந்த OTP எண்ணைப் பதிவிட்டால் மட்டுமே நம்மால் ஆன்லைனில் பணம் செலுத்த இயலும். இண்டெர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், பேங்க் மொபைல் ஆப் உள்ளிட்ட சேவைகள் அனைத்திலும் நமது மொபைல் எண் தற்போது முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே, நமது வங்கிக் கணக்கில் மொபைல் எண்ணைப் பதிவிடுவது அவசியமான ஒன்றாகும். ஆனால் மொபைல் எண்ணை பதிவுசெய்ய நாம் கணக்கு வைத்திருக்கும் அந்தக் குறிப்பிட்ட வங்கிக் கிளைக்கு செல்லவேண்டியிருக்கிறது. ஆனால் நம்மில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் இடத்தைவிட்டு வேலை மற்றும் சில காரணங்களால் வேறு இடங்களில் வசிப்பதால் இது கடினமாகிறது. எனவே, பலர் தங்களது வங்கிக் கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்யாமலே உள்ளனர். இதை சரிசெய்யும்நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்திய வங்கிகள் தங்களது அனைத்து ஏ.டி.எம்.களிலும் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணை பதிவுசெய்யும் வசதியை விரைவில் ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. எனவே இனி, விரைவில் நமக்கு அருகிலுள்ள ஏ.டி.எம். மிஷின்களிலேயே நமது மொபைல் எண்ணை பதிவு செய்துவிடலாம். இதனால் பண மோசடிகள் குறைக்கப்படும்.

No comments:

Post a Comment