இசை பயிற்சி பெற சிறுவர்களுக்கு அழைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 31, 2016

இசை பயிற்சி பெற சிறுவர்களுக்கு அழைப்பு

கலை பண்பாட்டு துறையின் கீழ் வழங்கப்படும் இசை, கலைப் பயிற்சியை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ், அரசு இசைக் கல்லுாரிகள், ஓவியக் கல்லுாரி, சிற்பக் கல்லுாரி மற்றும், 17 மாவட்டங்களில், அரசு இசைப் பள்ளிகள் செயல்படுகின்றன.

இத்துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர், இசைக் கலையை பயிலும் வகையில், பகுதி நேர கலைப் பயிற்சி, வழங்கப்பட்டு வருகிறது; அதன்படி, நீலகிரியில் இந்தாண்டு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, நீலகிரி கலெக்டர் சங்கர் அறிக்கை:

ஜவகர் சிறுவர் மன்றம் மூலம், ஊட்டி புனித மேரீஸ் ஹில் பள்ளியில், அடுத்த மாதம், 4ம் தேதி, காலை, 10:00 மணிக்கு பயிற்சி துவங்க உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இறுதி வரை, எட்டு மாதங்கள் பிரதி வாரம், சனிக்கிழமை மதியம், 3:00 மணி முதல், 5:00 மணி வரை, ஞாயிறு காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை பயிற்சி வழங்கப்பட உள்ளது.

வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், கீ போர்டு, கைவினை ஆகிய கலைகளில், பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன; 5--16 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்; பயிற்சிக் கட்டணம் இல்லை.

சிறுவர் மன்ற உறுப்பினராக பதிவு செய்ய, ஆண்டு சந்தாவாக, 200 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறார்கள், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியும். தவிர, கருத்தரங்கம், செயல் முறை பயிலரங்கம் ஆகியவற்றிலும் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், விபரம் தேவைப்படுவோர், ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர், 99434-33742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, சங்கர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment