சுற்றுலா தலங்களில் பாலித்தீன் பைகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தில், நாடு முழுவதும் தேசிய நினைவுச்சின்னங்களிலும், சுற்றுலா தலங்களிலும் இன்று முதல் பாலித்தீனுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை இன்று அக்டோபர் முதல் அமலுக்கு வருவதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா நேற்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தேசிய நினைவுச்சின்னங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பாலித்தீனுக்கு தடை அமலில் இருக்கும் எனவும் நுழைவாயிலில் உள்ள காவலாளிகள், சுற்றுலா பயணிகளிடம் பாலித்தீன் உள்ளதா என்று பரிசோதித்து அனுப்புவார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது பற்றி பிறகு முடிவெடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment