ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 26, 2017

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. 
ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், அதனை ஈடு செய்யும் வகையில் ரூ.7.4 டிரில்லியன் மதிப்பிலான 3.7 பில்லியன் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு தட்டுப்பாட்டை போக்குவதற்காக அவசர அவசரமாக இவை அச்சிடப்பட்டதாக கூறப்படுகிறது. 
ரிசர்வ் வங்கியின் புள்ளி விபர கணக்கின்படி, ஜூலை 14 வரை ரூ.15.22 டிரில்லியன் அளலான பணம் புழக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது. ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.500 நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்பட்டு வருகின்றன. கடந்த 40 நாட்களாக ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அதிகம் புழக்கத்தில் விட்டு வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment