தனித்தேர்வர்கள் நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 28, 2017

தனித்தேர்வர்கள் நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்!

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக ஜூலை 28 தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.வழிமுறைகள்தனித்தேர்வர்கள் வருகிற 28.07.2017 பிற்பகல் முதல் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன் "Provisional Mark Sheet SSLC Result - June 2017" என்பதை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது. 

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:ஜுன்-ஜூலை 2017 தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 31.07.2017 மற்றும் 01.08.2017 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.மறுகூட்டல் (Re-totalling) கட்டணம்இருநாட்கள் கொண்ட மொழிப்பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.305/-ஏனையப் பாடங்கள் - கணிதம், அறிவியல், சமூக அறிவியல் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-விருப்ப மொழிப்பாடம் - ரூ.205/-விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number)பயன்படுத்தியே தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் மறுகூட்டல் முடிவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment